மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜடைரம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி வரும் நிலையில் சுத்தமான குடி தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். போர்வெல் மட்டும் அமைப்புகுறிப்பாக திருப்பூர் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும் தற்காலிகமாக புதிதாக வீராசாமி நகரில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் போர்வெல் மட்டும் அமைந்துவிட்டு அதில் இணைப்பு வழங்கவில்லை, இதனால் பொதுமக்களுக்கு சுத்தமான குடி நீர் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்மேலும் வீராசாமி நகரில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வராததால் அங்கும் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென மேட்டுப்பாளையம் சத்தி சாலையில் வீராசாமி நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலால் கடும் போக்குவரத்து நெரிசல்இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையில் அணிவித்து நிறுத்தபட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்த அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும் சமாதானம் அடையாத பொதுமக்கள் உள்ளாட்சி அதிகாரிகள் வந்து உரிய பதில் அளித்தால் தான் கலைந்து செல்வோம் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். Related Link ஏற்கனவே நோயாள அவதிப்படுறோம், அதுல பாம்பு, தேள் வேற