திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள தேவிநாயக்கன்பட்டி கிராமத்தில் சிறுமியை நிலா பெண்ணாக தேர்ந்தெடுத்து கிராம மக்கள் விடிய விடிய வினோத வழிபாடு செய்தனர். தைப்பூச தினத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வழிபாடு செய்தால் விவசாயம் செழிப்படையும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.