உலக பக்கவாத நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுரையில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தெப்பக்குளம் பகுதியில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி சார்பில் பக்கவாத நோய் தடுப்பு விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணாக்கர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது.