கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தாம் தினசரி பயணிக்கும் தனியார் பேருந்தை மறித்து பெண் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கோவைக்கு காலை 9 மணிக்கு தினசரி செல்லும் தனியார் பேருந்தில் பயணிக்கும் பெண், தான் எப்போது அமரும் இடத்தில் வேறொரு பயணி உட்கார்ந்து இருந்ததால் ஆத்திரமடைந்தாக கூறப்படுகிறது. இதனால் தான் அமருவதற்கு இடமில்லை என பேருந்தை மறித்து சீட்டு வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.