திருவண்ணாமலை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்த அதிகாரிகளை கண்டித்து, மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பட்டா வைத்திருந்தும் அது செல்லாது என கூறி வீடுகளை இடித்து அகற்றியதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.