சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வரதட்சணை கேட்டு வீட்டிலிருந்து வெளியேற்றபட்ட பெண், கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சுப்ரமணி- இந்துமதி தம்பதிக்கு கடந்த 2023 ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், பிரசவத்திற்கு பிறகு தந்தை வீட்டில் இருந்து குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வந்த இந்துமதியை வரதட்சனை கேட்டு அவரது கணவர் சுப்பிரமணி, மாமனார் மாணிக்கம், மாமியார் ராசாத்தி ஆகியோர் வீட்டிலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தந்தை வீட்டில் வசித்து வந்த இந்துமதி, கணவர் வீட்டின் முன்பு கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.