அந்தக் காரை யார் இப்போ வைத்திருக்கிறார்கள். இதான் எனக்கு வேலையா, அந்தக் காரை யார் ஓட்ரான்னு எனக்கு என்ன தெரியும் என தஞ்சாவூரில் விஜய் - திரிஷா குறித்து நடிகர் விமல் கேள்வியெழுப்பினார்.விஜய்-திரிஷா குறித்து கிண்டல்தஞ்சாவூரில் உள்ள திரையரங்கில் நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படத்தை நடிகர் விமல், நடிகர் சுதாகர் ஆகியோர் கண்டு ரசித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் விமல், தஞ்சாவூரில் நடைபெற்ற தவெத மாநாட்டிற்கு வந்த இளைஞர்கள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அது குறித்து விஜய் அறிக்கை கூட வெளியிடவில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவரே கொடுக்கல நம்ம என்ன கொடுக்கிறது என கிண்டலாக கூறினார்.நடிகருக்காக உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்தொடர்ந்து பேசிய அவர், நடிகர் பின்னால் கும்பல் கூடுங்கள் ஆனால் ஜாக்கிரதையாக இருங்கள். வண்டியை பின் தொடர்ந்து போவது என்பது தவறான ஒன்று என்றும் ஏன் அந்த அளவிற்கு செல்ல வேண்டும், பிடிக்குதா மனசுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். விரட்டிக்கொண்டு போயி உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா?தொடர்ந்து விஜய் திரிஷா குறித்து கேட்டதற்கு, இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா. அதான் எனக்கு வேலையா. அந்தக் காரை யார் ஓட்ரான்னு எனக்கு என்ன தெரியும் என சிரித்துக்கொண்டே கேள்வியெழுப்பினார். விஜய் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு, எல்லோருடைய பார்வை என்னவோ அதான் எனக்கும் என தெளிவாக பதில் அளித்தார்,ஜனநாயகன் பற்றி தெரியாது...விஜய் முதலமைச்சராக வருவார் என்ற கேள்விக்கு, அது எனக்கு தெரியாது. தேர்தலுக்குப் பிறகு தெரியவரும் என கூறிய அவர், ஜனநாயகன் படப்பிரச்சினை குறித்து கேட்டதற்கு எனக்கு எதுவும் தெரியாது என நேரடியாக பதில் அளித்தார். நச்சென பதில் அளித்த விமல்உங்களுக்கு அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி கேட்க அதற்கு உள்ள பொழப்பை ஒழுங்கா பார்க்க முடியவில்லைம் இதில் அரசியல் வேறா என நச்சென பதிலளித்தார். Related Link மக்களை மடையர்கள் ஆக்கியது இவர்கள் தான்...