கோவை... நடந்து சென்று கொண்டிருந்த வடமாநில இளைஞர். தனது நண்பருடன் சேர்ந்து வடமாநில இளைஞரை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர். அடித்த அடியில் அடுத்த சில மணி நேரங்களிலேயே வடமாநில இளைஞர் உயிரிழப்பு. வடமாநில இளைஞரை ஆட்டோ டிரைவர் அடித்துக் கொன்றது ஏன்? வடமாநில இளைஞருக்கும் ஆட்டோ டிரைவருக்கும் என்ன முன்விரோதம்? பின்னணி என்ன?வேலை முடிஞ்சதும் வழக்கம்போல தன்னோட நண்பர்கூட வீட்டுக்கு நடந்து போயிட்டு இருந்துருக்காரு ஒரு இளைஞர். அப்போ, சாலையில நின்னுட்டு இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் தன்னோட ஆட்டோவ ரிவர்ஸ்ல நகர்த்திருக்காரு. அந்தநேரம், சாலையோரம் நடந்து போயிட்டு இருந்த இளைஞர்மேல ஆட்டோ இடிச்சதா சொல்லப்படுது. அதனால, கோபப்பட்ட இளைஞர் அரைகுறையான தமிழ் வார்த்தைகள்ல அந்த ரெண்டுபேரையும் திட்டிருக்காரு. ஆட்டோவ பாத்து எடுக்க முடியாதா? கண்ண எங்க வச்சிருக்கீங்கனு தெளிவா சொல்லலனாலும் அந்த வார்த்தைகளைதான் இளைஞர் அரைகுறையா சொல்லிருக்காரு. அது ஆட்டோ ஓட்டுநருக்கும், அவருகூட நின்னுட்டு இருந்த அவரோட நண்பருக்கும் ஆத்திரத்த தூண்டிருக்கு. அதனால பொறுமையிழந்த ரெண்டுபேரும் வடமாநிலத்துல இருந்து பொழைக்க வந்துட்டு யார்கிட்ட திமிர் பேச்சு பேசுற? தமிழ்நாட்டுக்குள்ள உனக்கென்ன வேலைனு ஒருமையில பேசி ஆபாச வார்த்தைகள்ல திட்டிருக்காங்க. பதிலுக்கு இளைஞரும் எகிற வாக்குவாதம் அடிதடியா மாறிருக்குது. அதுக்குப்பிறகு ஆட்டோ ஓட்டுநரும் அவரோட நண்பரும் சேர்ந்து வடமாநில இளைஞரை கண்மூடித்தனமா அடிச்சிருக்காங்க. ரெண்டுபேரும் சேந்து அடிச்ச அடியில நிலைகுலைஞ்சிபோய் மயங்கி கீழே விழுந்துட்டாரு இளைஞர். வடமாநில இளைஞர்கூட வந்த நண்பர் மயங்கி கிடந்த தன்னோட நண்பரை தூக்கிட்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடிருக்காரு. ஆனா, இளைஞர் ஏற்கெனவே உயிரிழந்துட்டதா மருத்துவர்கள் சொல்லிருக்காங்க. அதக்கேட்டு ஷாக் ஆன நண்பர், B1 பெரிய கடை வீதி போலீஸ் ஸ்டேஷன்லபோய் கம்ப்ளைண்ட் குடுத்துருக்காரு. அதுக்குப்பிறகு போலீசார் வழக்குப்பதிவு செஞ்சி விசாரணை நடத்திருக்காங்க. அப்பதான், இளைஞர் யாரு? இளைஞரை அடிச்சி கொன்னவங்க யாருனு எல்லாமே தெரியவந்துச்சு.கொல்கத்தாவைச் சேர்ந்த 23 வயசான இளைஞர் சுராஜ், கோவை கரும்புக்கடை பகுதியில உள்ள ஒரு சைனீஸ் ஓட்டல்ல மாஸ்டரா வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. புல்லுக்காடு பகுதியில உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பாத்த சுராஜ், நைட் வேலை முடிஞ்சி தினமும் நடந்து வர்றது வழக்கம். அப்படிதான், சம்பவத்தன்னைக்கும் தன் நண்பர்கூட நடந்து வந்துட்டு இருக்காரு. அப்ப, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முகமது பாசித் தன்னோட ஆட்டோவ ரிவர்ஸ் எடுத்துருக்காரு. அந்தநேரந்தான் பிரச்சனையாகி முகமது பாசித்தும், அவரோட நண்பர் பிரகாசும் சேர்ந்து சுராஜை அடிச்சி கொன்னுருக்காங்க. ஆனா, அடிச்சதுல சுராஜ் மயங்கிதான் விழுந்துருட்டாருனு நெனச்ச ஆட்டோ டிரைவரும் அவரோட நண்பரும் எப்போதும்போல ஊருக்குள்ள தான் சுத்திட்டு இருந்துருக்காங்க. அடுத்து, சுராஜ் உயிரிழந்ததால முகமது பாசித்தையும், பிரகாஷையும் கைது பண்ணி கோவை மத்திய சிறையில அடைச்சிட்டாங்க போலீசார்.