சென்னை குரோம்பேட்டையில் செல்போன் மற்றும் துணிக்கடைகளில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தில் பணம் உட்பட 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டன. இதில் தொடர்புடைய இர்பான் கான் என்பவரை ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் துப்பாக்கி முனையில் கைது செய்த குரோம்பேட்டை போலீசார் தாம்பரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் முகமது அலி என்பவர் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்ததையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.