திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடபட்ட நிலையில், கால்வாய் நிரம்பி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், முறையாக தூர்வாரப்படாததாலும் கால்வாய் நிரம்பி வெள்ளம் சாலைக்கு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.