திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரசாயனக் கழிவுகள் கலப்பால், கமண்டல நாக நதியில் தண்ணீர் நுரை பொங்கி காணப்படுகிறது. ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பட்டுச்சேலை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு பட்டுச்சேலைக்கு நிறமேற்ற பயன்படுத்தப்படும் ரசாயனக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கமண்டலநாக நதியில் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்றுநீர் மாசடைந்து நுரை பொங்கி காணப்படுவதால் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கமண்டலநாக நதியையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.