தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில், தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று, மாா்ச் 4ஆம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூர் கூட்டத்தில் விஜய் பேசியதாவது;* நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு உறுதிமொழியை கொடுக்க வேண்டும்; ஊழலற்ற தவெக ஆட்சியை அமைப்பீர்களா?* இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்கள் தானே?, ஒவ்வொரு பூத்திலும் விசில் சத்தம் கேட்கும்தானே? விசில் சத்தம் ஓட்டாக மாறும் தானே?* வேலூர் கூட்டத்தில் தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என்று நான் ஏன் கூறினேன் என்றால், உண்மையான பிரதிநிதி நாம் என்பதற்கு தான் அப்படி கூறியிருந்தேன். * விஜய் vs ஸ்டாலின் எனக் கூறியிருந்தேன், தமிழ்நாடு பேரவைத் தேர்தலுக்கு டில்லியை பற்றி ஏன் பேச வேண்டும்? என்று கேட்டிருந்தேன், உடனே பாஜகவுக்காக விஜய் பேசுகிறார் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.* சென்னையில் டில்லி டில்லி எனக் கூறுகிறார்கள், ரைடு வந்தால் டில்லிக்கு வெள்ளைக் கொடி பிடிக்கிறார்கள். * தமிழ்நாட்டை காப்பாற்றுவது பிழைக்க வைப்பது எல்லாம் திமுக, ஸ்டாலின் தான் என்பதெல்லாம் வேலை செய்யாது. * சின்ன குழந்தைகள் எல்லாம் கூற ஆரம்பித்துவிட்டார்கள், ’ஓம் சக்தி திமுக ஒரு தீய சக்தி’ என்று. * கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டில்லி தொட்டுக்கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே, தேர்தலில் விசில் போடப் போவது தவெக. * எனக்கும் என்னுடைய மக்களுக்கும் இடையே யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். * மற்றவர்களுக்கு இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன். Related Link உயிருக்கு உத்தரவாதம் எங்கே? - விஜய்