தமிழக வெற்றிக் கழக தலைவர், பாஜக கூட்டணிக்கு போய் விடுவார் என்ற சபாநாயகர் அப்பாவு ஆசை நிறைவேறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலியில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்கள் நலனுக்காக திமுக ஒருபோதும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதில்லை என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராகவே போராடி வருவதாகவும் தெரிவித்தார்.இதையும் பாருங்கள் - SIR குறித்த கேள்வி "அவர்களை திமுக தூண்டிவிடுகிறது" நயினார் குற்றச்சாட்டு | NainarPressMeet