கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை அடமானம் வைக்க சென்ற விவசாயி ஒருவரை அங்கிருந்த ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சித்திரைசாவடியில் செயல்பட்டு வரும் தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அதே பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் நகை அடமானம் வைக்க சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் 200 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் தான் நகைக்கு பணம் தரமுடியும் என தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பணம் தர மறுத்ததாக கூறி, செந்தில்முருகனை அந்த ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்ததாக தெரிகிறது.