குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பசும்பொன்னில் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவர், மீனாட்சியம்மனை தரிசித்த பிறகு, அழகர் கோயில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு ஏராளமான பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் வருகை தந்து, குடியரசு துணைத் தலைவரை சந்தித்தனர்.அப்போது, ”அண்ணே, கூட்டணியை மறந்து விடாதீங்க” என்று, செல்லூர் ராஜுவை பார்த்து உற்சாகமாக பாஜகவினர் கோஷம் எழுப்பினர். சுற்றுலா மாளிகைக்கு வந்த துணை ஜனாதிபதி சிபிஆர், பாஜக தொண்டர்களை பார்த்தவுடன், வாகனத்திலிருந்து இறங்கி, தொண்டர்கள் வழங்கிய பூங்கொத்து உள்ளிட்ட பரிசுகளை ஏற்றுக் கொண்டார். இதையும் பாருங்கள்... இரவில் குடியரசு துணை தலைவரை சந்திக்க வந்த அதிமுகவினர்| ADMK | CP Radhakrishnan