கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மந்தமாக நடைபெற்று வரும் மேம்பால பணி காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கோபசந்திரம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் இயக்கப்படுகின்றன.