கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கு கிராம நிர்வாக அலுவலர் பணம் கேட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வி.குமாரமங்கலம் கிராமத்தில் வசிக்கும் 30க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்திருந்த நிலையில், அதனை கிராம நிர்வாக அலுவலர் ராஜவேல் என்பவர் பரிசீலனை செய்யாமல் இடைத்ததரகர்களை வைத்து 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க சென்ற வி.குமாரமங்கலம் பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், கிராம நிர்வாக அலுவலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.