திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் 5ஆம் நாளில் நம்பெருமாள் சிவப்பு நிற பட்டு அணிந்து சவுரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புஜக்கீர்த்தி, இரு வெள்ளைக்கல் வில்வ பத்ர பதக்கம், முத்து பட்டை, முல்லைப் பூ சரம் சாற்றி, தங்க கோலக்கிளி, ரங்கூன் அட்டிகை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து தங்க பல்லக்கில் எழுந்தருளினார். அர்ஜூன மண்டபத்தில் காட்சியளித்த நம்பெருமாளை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.