Also Watch
Read this
By: Web Team

சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை, 9 நாட்கள் கடந்தும் கைது செய்யாததை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்ற தவெகவினரில், காவல்நிலையத்திற்குள் சென்று மனு அளிக்க 5 பேரை மட்டுமே அனுமதித்ததால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அனுமதியில்லாமல் பேரணியாக வந்ததற்கு வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved