திருவண்ணாமலைக்கு வருகை தந்த ஆளுநர் R.N.ரவிக்கு மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை முழங்க, ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.விளாங்குப்பம் கிராமத்தில் பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார்.அங்குள்ள, மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஆளுநர் ரவி, ஜவ்வாது மலையில் விளையக்கூடிய பொருட்களைக் கொண்டு மலைவாழ் மக்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை மலைவாழ் மக்களோடு அமர்ந்து சாப்பிட்டார்.