கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காதலியை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கிய இளைஞர், கழுத்தில் கயிறு இறுக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஜெய்சங்கர், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் காதலியை தொடர்பு கொண்டு தகராறு செய்த அவர், தற்கொலை செய்து கொள்வதாக கூறி, கழுத்தில் கயிறு மாட்டியபடி, விளையாட்டாக மிரட்டியதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் கயிறு இறுக்கி இளைஞர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.