Also Watch
Read this
Posted on: Dec 30, 2024 01:39 AM
By: Srini Vasan

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கால தொடர் விடுமுறை மற்றும் பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.
காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இரவு 7 மணி வரை சாலையின் இரு புறங்களிலும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து சென்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved