திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார்.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூலி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவரிடம், ஆன்மீகவாதி என்ற அடிப்படையில் திருப்பதி லட்டு விவகாரத்தில் ரஜினியின் கருத்தை செய்தியாளர்கள் கேட்டனர்.