திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சாலை நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்குள் புகுந்த டிப்டாப் ஆசாமி பூட்டை கடப்பாரையால் உடைத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோயில் காவலாளி அங்கேயே இருந்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் பூட்டை உடைக்க முயன்ற டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.