நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலை நம்பி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது.எனவே மலை நம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.மேலும் வெள்ளத்தின் அளவு குறைந்தால் மட்டுமே குளிப்பதற்கும், கோவிலுக்கு செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.