Also Watch
Read this
By: Web Team

மேட்டுப்பாளையம் ஸ்ரீவாரி ஆலயத்தில், நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இவ்வாண்டு கடந்த செப்.24ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் தம்பதி சமேதராய் எழுந்தருளிய மலையப்ப சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோயிலின் முன்பு துவங்கிய தேரோட்டம் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved