இளம்பெண் மற்றும் 2 குழந்தைகளுடன் லாட்ஜூக்கு வந்த இளைஞர்.. 2 நாட்கள் கழித்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு இளம்பெண் சென்ற நிலையில் தனது லுங்கியில் தூக்கில் தொங்கிய கார் டிரைவர்.. இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? இளைஞருடன் வந்த இளம்பெண்ணும், குழந்தைகளும் யார்? இளம்பெண் இளைஞரை மட்டும் லாட்ஜிலேயே விட்டுவிட்டு சென்றது ஏன்? பின்னணி என்ன?இளைஞருடன் தங்கி இருந்த இளம்பெண்ணிடம் விசாரணைஇளைஞரோட தான் தங்கி இருந்த ரூம் கதவு உள்பக்கமா தாழ்ப்பாள் போடப்பட்ருந்ததால பதற்றமான இளம்பெண், கத்தி சத்தம்போட்டுக்கிட்டே கதவ தட்டிருக்காங்க. ஆனா, உள்ள இருந்த இளைஞர் கதவை திறக்கவே இல்ல. அதுக்குப்பிறகு கதவை எட்டி உதைச்சி அந்த இளம்பெண்ணே கதவ உடைக்க, சத்தங்கேட்டு லாட்ஜ் ஊழியர்களும் அறைக்கு வந்துருக்காங்க. அப்போ, அந்த அறையில தங்கி இருந்த இளைஞர், ஃபேன்ல தூக்கு மாட்டி தற்கொலை செஞ்சத பாத்து அதிர்ச்சியாகிருக்காங்க. அடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் குடுத்துருக்காங்க ஊழியர்கள். அதுக்குப்பிறகு அங்க வந்த போலீசார், லுங்கியில சடலமா தொங்கிட்டு இருந்த இளைஞரோட சடலத்த மீட்டதோட அந்த இளம்பெண்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. அப்பதான் உயிரிழந்த இளைஞர் யாரு? அவரு ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டாருனு எல்லாத்துக்குமே விடை கிடைச்சது. Related Link ஒற்றை போட்டோவால் சிக்கிய குற்றவாளி குழந்தைகள் முன்பு ஹரிதாஸை திருமணம் செய்த பெண்கடலூர், சிதம்பரம் பக்கத்துல உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 26 வயசான இளைஞர் ஹரிதாஸ். கார் டிரைவரா வேலை பாத்துட்டு இருந்த இந்த இளைஞருக்கு அதே பகுதியை சேர்ந்த ஏற்கெனவே திருமணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்குற 24 வயசான ஒரு இளம்பெண்கூட பழக்கம் ஏற்பட்டதா தெரியுது. அந்த பழக்கம் நாளடைவுல கள்ளக்காதலா மாறிருக்குது. அந்த பொண்ணையே திருமணம் பண்ணிக்க விருப்பப்பட்ட ஹரிதாஸ், உன் கணவரை விட்டுட்டு வந்துரு, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னதா கூறப்படுது. அந்த வார்த்தையில மயங்குன அந்த பொண்ணும், தன் குழந்தைகள் ரெண்டு பேரையும் அழைச்சிக்கிட்டு இளைஞர்கூட திருப்பூருக்கு போய்ருக்காங்க. அங்க உள்ள ஒரு கோவில்ல வச்சி தன் குழந்தைகள் முன்னாலேயே ஹரிதாஸை கல்யாணம் பண்ணின அந்த பொண்ணு, அடுத்து கடந்த 22ஆம் தேதி சிதம்பரம் சபாநாயகர் தெருவுல உள்ள ஒரு லாட்ஜ்ல அறை எடுத்து தங்கிருக்காங்க. குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறிய கணவர்ரெண்டு நாள் ஹரிதாஸ்கூட அந்த பொண்ணு லாட்ஜ்லயே தங்கி இருக்காங்க. இதுக்குமத்தியில, வீட்டைவிட்டு காணாமபோன மனைவிக்கு போன் பண்ணிருக்காரு அந்த பொண்ணோட கணவர். ஏற்கெனவே மனைவியோட கள்ளக்காதல் விவகாரம் அவருக்கு தெரியும். அந்த தகாத உறவால தம்பதிக்குள்ள பலமுறை சண்டை நடந்துருக்குது. பலமுறை கண்டிக்கவும் செஞ்சிருக்காரு. ஆனாலும், மனைவி கள்ளக்காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இல்ல. இதுக்குமத்தியில திடீர் மனைவி காணாமபோனதால கள்ளக்காதலனோடதான் அவங்க போயிருப்பாங்கனு முடிவெடுத்த கணவர், நீ யார்கூட வேணாலும் போ, என் பிள்ளைகளை ஒப்படைச்சிருனு போன் பண்ணி சொல்லிருக்காரு. அதனால, அந்த பொண்ணும் குழந்தைகளை கணவர்கிட்ட விட்டுட்டு மறுபடியும் வர்றதா ஹரிதாஸ்கிட்ட சொல்லிருக்காங்க. இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார்அப்போ, வீட்டுக்குப்போனா உன்னைய விடமாட்டாங்க, அதனால போக வேண்டாம்னு சொல்லி கெஞ்சி அழுதுருக்காரு இளைஞர். அதுக்கு, கண்டிப்பா வருவேன், நீ என்னைய நம்புனு சொன்ன இளம்பெண் சொன்னமாதிரியே குழந்தைகளை முதல் கணவர்கிட்ட விட்டுட்டு லாட்ஜூக்கு வந்துருக்காங்க. ஆனா, அறைய உள்பக்கமா தாழ்ப்பாள் போட்ருந்த ஹரிதாஸ் இளம்பெண் வரமாட்டாங்க, தன்னைய ஏமாத்திட்டங்கனு நினைச்சி லுங்கியில தூக்கிட்டு தற்கொலை பண்ணிட்டாரு. ரொம்பநேரம் கதவ தட்டியும் திறக்காததால பதறுன இளம்பெண் கதவ உடைச்சி உள்ளபோய் பாத்தப்பதான் இளைஞர் தற்கொலை செஞ்சிக்கிட்ட விவரமே தெரிஞ்சிருக்குது. அடுத்து, வழக்குப்பதிவு செஞ்ச போலீசார் இளம்பெண்கிட்ட விசாரணை நடத்திட்டு இருக்காங்க. கள்ளக்காதலால குடும்பம் குட்டிகளை இழந்த அந்த இளம்பெண் இப்ப கள்ளக்காதலனையும் இழந்து நிக்கிறாங்க. அவசரபுத்தி ஆபத்துலதான் முடியும் அப்டிங்குறதுக்கு இந்த சம்பவம்தான் உதாரணம்... Related Link நண்பரின் காதலிக்கு டார்ச்சர்