புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்ணத்தில் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான பெண்ணை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கும் சதாம் நபர் பகுதியில் வசந்தி என்பவர் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு என சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் பலரும் சீட்டு போட்டு பணம் கட்டி வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வசந்தி தலைமறைவாகியுள்ளார்.