காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சென்ற லோடு வேன் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலத்த காயமடைந்தனர். சுங்குவார்சத்திரம் அருகே இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தொழிலாளர்கள் லோடு வேனில் சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் செல்ல போலீசார் தடைவிதித்ததால், லோடு வேனில் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறி தொழிலாளர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறப்பு காவல் ஆய்வாளர் மணிகண்டனை கீழே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.