சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் இருந்த 200 ஆண்டுகள் பழமையான தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் ஆலய ஆலமரம் இரண்டாக முறிந்து விழுந்தது. வருடாபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற நிலையில் திடீரென நள்ளிரவில் ஆலமரம் விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, அகற்றுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டதையடுத்து, மரத்தை எடுக்காமலே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.