Also Watch
Read this
Posted on: Nov 29, 2025 12:46 PM
By: Web Team

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த 3 மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த புலி பெரிய கூண்டில் சிக்கிய நிலையில், ஆக்ரோஷமாக காணப்படுவதால் சிறிய கூண்டில் மாற்றி வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவர் சோலை சுற்றுப் பகுதிகளில் சுற்றி திரிந்த புலி அடிக்கடி கால்நடைகளை வேட்டையாடியதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் கூண்டுகள் வைத்து புலியை கண்காணித்து வந்த நிலையில், இன்று பிடிப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved