வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் கழிவு கால்வாயில் தவறி விழுந்த லாரி ஓட்டுநரை தேடும் பணி 4-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஜெகந்நாதபுரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் நாகராஜ், கடந்த 1-ம் தேதி வடசென்னை அனல்மின் நிலையத்தின் 2-வது அலகில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சாம்பல் ஏற்றிச் சென்றுள்ளார். அங்கு, லாரியை நிறுத்திவிட்டு அப்பகுதியில் சிறுநீர் கழிக்கச் சென்றவர், கூலிங் டவர் அருகே உள்ள சாம்பல் நீரை வெளியேற்றும் கால்வாயில் தவறி விழுந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. 4 நாட்களாக உடல் கிடைக்காத நிலையில், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நாகராஜின் உடலை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.