கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவாமூர் பகுதியில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட பள்ளம் தோண்டிய போது சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.