news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி மாணவர்களை அரசு பேருந்தை தள்ள வைத்த காட்சி
tv

Also Watch

tv

Read this

பள்ளி மாணவர்களை அரசு பேருந்தை தள்ள வைத்த காட்சி

பவித்திரமாணிக்கம், திருவாரூர்

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvarur bus issue

அரசு பேருந்தை தள்ள வைத்த காட்சி :

திருவாரூர் மாவட்ட நான்காவது புத்தகத் திருவிழா திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த புத்தக கண்காட்சி நேற்று தொடங்கிய நிலையில் வரும் 17ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இதில் தினம் தோறும் புத்தக கண்காட்சி,மாணவ மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் சிறப்புரை சிறப்பு நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியை நேற்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

திருவாரூர் மாவட்ட முழுவதும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் இந்த புத்தக கண்காட்சியை நேரில் வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்து புத்தக கண்காட்சியை கண்டு களித்துவிட்டு திரும்ப செல்லும் போது அவர்கள் வந்த அரசு பேருந்து கண்காட்சி நடக்கும் தனியார் திருமண மண்டபத்திலிருந்து சிறிது தூரத்தில் பழுதாகி சாலை ஓரத்தில் நின்றுள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் கீழே இறங்கி அந்த அரசு பேருந்தை சிறிது தூரம் தள்ளிச் சென்றும் அந்த அரசு பேருந்து ஸ்டார்ட் ஆகாத காரணத்தினால் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தை தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Related Link
திருப்பத்தூர் அருகே பாலத்தில் கயிறை கட்டிய ஒப்பந்ததாரர்

திருப்பத்தூர் அருகே பாலத்தில் கயிறை கட்டிய ஒப்பந்ததாரர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

4
1 hr 10 mins agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved