விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 100 வருட பழமையான அரச மரத்தின் வேர் வீட்டிற்குள் சென்றதில் வீடு இடிந்து விழுந்து சேதமானது. ஊரணிப்பட்டி தெருவில் உள்ள சிவஞானம் என்பவரது வீட்டிற்கு அடியில் அம்மரத்தின் வேர் படர்ந்து வளர்ந்திருந்த நிலையில், வேரின் அழுத்தம் தாங்காமல் வீடு இடிந்து விழுந்தது.