Also Watch
Read this
By: Fyrose Banu

நெய்வேலியில் என்.எல்.சி.இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து எடுக்கபடும் நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.இந்த நிலையில் என்.எல்.சி நிறுவனத்தில் நிலக்கரி எடுப்பதில் கிடைக்கும் சாம்பலை இரண்டு மாதங்களுக்கு முன்பு விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக என்று நிலக்கரி சாம்பல் டெண்டர் கோரப்பட்டு இந்த சாம்பலை கொண்டு இப்போது பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
மிகவும் நச்சுத்தன்மை உடைய சாம்பல்
இந்த சாம்பல் நெடுஞ்சாலை பணிக்கும், நெய்வேலி இந்திரா நகர் ஆர்ச் கேட் எதிரில் உள்ள மேம்பால கட்டுமான பணிக்கும் கொள்ளுகாரன்குட்டை போன்ற இடங்களில் உள்ள பால கட்டுமான பணிக்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சாம்பல் மிகவும் நச்சுத்தன்மை உடையது என கூறபடுகிறது. இந்த சாம்பலை எந்தவித பாதுகாப்பும் இன்றி கையாளுவதாகவும், அந்த வழியாக செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
மூச்சு விட திணறும் மக்கள்
மேலும் இதன் அருகிலேயே உணவகங்கள், பேக்கரிகள் உள்ளன இந்த சாம்பல் படிந்த உணவை உண்ணுவதால் வயிறு உபாதைகளுக்கு உள்ளாவதாகவும், இந்த சாம்பல் காற்றில் கலந்து வரும் காற்றை மக்கள் சுவாசிப்பதால் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இந்த சாம்பலை பயன்படுத்துவதாவும் புகார் தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved