news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை
tv

Also Watch

tv

Read this

தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை

ஒரே நாளில் இருமுறை உயர்வு

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தற்போது ரூ.90.46 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தும் வருகிறது. இதனால், தங்கத்தின் விலை, புதிய உச்சங்களைக் கண்டு வருகிறது.
இன்று காலை, வரலாறு காணாத வகையில் ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,250-க்கும், ஒரு சவரனுக்கு, ரூ.1,600 உயர்ந்தது.
ஒரு சவரன் ரூ.98,000-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று பிற்பகல், இரண்டாவது முறையாக மீண்டும் உயர்வைக் கண்டது.
இதன்படி, தற்போது ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,370-க்கும், சவரனுக்கு மேலும் ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஒரு பவுன் ரூ.99,000-ஐ நெருங்கியுள்ளது.
வெள்ளி விலையும் உயர்வு
தங்கம் விலை தான் ஒரே நாளில் இருமுறை உச்சம் தொடுவதைக் கண்டிருக்கிறோம். ஆனால், இன்று வெள்ளியும் இருமுறை உச்சம் கண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.216க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.2.16 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 33 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved