செங்கல்பட்டு மாவட்டம் அச்சுறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலராகஅதே கிராமத்தைச் சேர்ந்த தசரதன் வயது 47 தந்தை பெயர் ஆறுமுகம் என்பவர்பணியாற்றி வருகிறார் அவர் இன்று காலை தனது விவசாய நிலத்தில் நடவு செய்து உள்ள நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது மோட்டார் சுவிட்சை போடும்போது மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அங்கு அருகில் இருந்தவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது அங்குமருத்துவர் பரிசோதனை செய்த போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார் இவர்கள் சங்கத்தில் இவர் ஊராட்சி செயலாளர்கள் சங்க வட்டார தலைவராக உள்ளார் இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link 3 நாட்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம்