தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில், வேளாண்மைத்துறையில் பணிபுரியும் இளம்பெண்ணிற்கு. மதுபோதையில் பாலியல் தொந்தரவு கொடுத்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அலுவலக பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்ட காரில் கடந்த 6ஆம் தேதி பெண் பணியாளரை அழைத்து சென்ற அறிவழகன், ஓட்டுநரை கீழே இறங்க சொல்லிவிட்டு, அத்துமீறியதாக கூறப்படுகிறது. அலுவலகத்திற்கு எப்போதும் மதுபோதையிலே வரும் அவர், தென்காசி மாவட்டத்தில் வேலை செய்த போது, அலுவலகத்தில் மதுபோதையில் இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் பாருங்கள் - இளம் பெண்ணிடம் அதிகாரி செய்ற வேலையா இது - உடனே பாய்ந்த ஆக்சன் | Thoothukudi | SexualHarassment