ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்காக தயாராகி வருகிறது.550 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில்பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாலத்திலுள்ள பக்கவாட்டு தடுப்பு கம்பிகளில் தேசிய கொடியின் நிறத்தில் உப்புக் காற்றில் துருப்பிடிக்காத வகையிலான பெயிண்ட்கள் பயன்படுத்தி வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.