பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மக்காச்சோள வயலில் சருகுகளை தீயிட்டு கொளுத்த சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், வயலுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடி பார்த்தபோது, அவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.