தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நிலப்பிரச்சனை காரணமாக வட்டாட்சியர் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதுகாப்புக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தம்பதியர் புகார் அளித்தனர். டி.கணிக்காரபள்ளி பகுதியில் உள்ள 18ஏக்கர் விவசாய நிலத்தில் ஒரு பாகத்தினை ஆறுமுகம் என்பவரது மகள் தேவகி சரவணன் பராமரித்து வருவதாகவும், மற்றொரு பாகத்தினை வேலு என்பவரது மகனான வட்டாட்சியர் ரஜினி என்பவர் பராமரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேவகி சரவணன் தம்பதி தங்களது நிலத்தில் கொட்டகை அமைத்தபோது, வட்டாட்சியர் ரஜினி அதனைத் தடுத்து தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் தெரிவித்தனர்.