கோவை அருகே பண்ணை தோட்டத்தில் ஆட்டுக்குட்டிகளை வேட்டியாடி வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மருதமலை அருகே ஓனம்பாளையம் பண்ணை தோட்டத்தில் ஆட்டுக்குட்டிகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து தானியங்கி கேமராவும் பொருத்தி இருந்தனர். ஆனால், கூண்டில் சிக்காத சிறுத்தை, தொண்டாமுத்தூர் அருகே பூச்சியூர் பூபதி ராஜா நகரில் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்குள் பதுங்கி இருப்பது தெரியவந்து வனத்துறையினர் சென்று சுற்றிலும் வலையை கட்டி வைத்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுத்தை தாவிக் குதித்து வெளியே வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் இருவரை தாக்கிய நிலையில், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.