ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காவல்துறையால் ஏற்பட்ட மனஉளைச்சலே காரணம் எனக்கூறி உறவினர்கள் அந்தியூர் மருத்துவமனை அருகே நள்ளிரவு வரை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்ரதீபன். கடந்த ஜூன் மாதம் 8 பேர் கொண்ட கும்பல் இவரை தாக்கியதாக அந்தியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 8 பேர் மீதும் FIR பதிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்த புகாரில் உண்மை தன்மை இல்லை என மனுவை போலீசார் கடந்த வாரம் தள்ளுபடி செய்ததாகவும் கூறப்படுகிறது.அதற்கான நோட்டீஸை போலீசார் சுப்ரதீபன் வீட்டின் கதவில் ஓட்டி சென்ற நிலையில், மன உளைச்சலில் இருந்த சுப்ரதீபன் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.