காவிரி ஆற்றுக்கரையோரத்தில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர். ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி. சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். சிசிடிவியில் பதிவாகியிருந்த பகீர் காட்சிகள். பைக் மூலம் சடலத்தை கொண்டு வந்து காவிரி ஆற்றில் வீசியது அம்பலம். போலீசையே நடுநடுங்க வைத்த செல்பி போட்டோ. இளைஞரை தலையிலையே வெட்டி கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியது ஏன்? கொலைக்கான காரணம் என்ன?ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதை கண்டு அதிர்ச்சி12ம் தேதி காலை நேரம். நாமக்கல் - ஈரோடு மாவட்ட எல்லை வழியாக செல்லும் காவிரி ஆற்று கரையில மீனவர் ஒருத்தரு மீன்பிடிச்சுட்டு இருந்தாரு. அப்ப கரையோரத்துல ஆண் சடலம் ஒன்னு ஒதுங்கிருக்கு. இத பாத்து அதிர்ச்சியடைஞ்ச மீனவர் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிருக்காரு. இதகேட்டு உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த பார்வையிட்டாங்க. அப்ப சடலத்தோட தலை, முகத்துல எல்லாம் வெட்டுக்காயங்கள் இருந்தத பாத்த போலீஸ் இத கொலைன்னு கன்பார்ம் பண்ணி சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு விசாரணையில இறங்குனாங்க. முதல்ல அந்த மீனவர் கிட்ட இருந்து விசாரணைய ஸ்டார்ட் பண்ணிருக்காங்க போலீஸ். அப்ப அந்த மீனவர், நான் டெய்லி இங்க மீன் பிடிக்க வருவேன், அதே மாதிரி இன்னைக்கு மீன் பிடிச்சுட்டு இருக்கும்போது சடலம் ஒன்னு கரையொதுங்கிச்சு, ஆனா உயிரிழந்த இளைஞர் யாருன்னு எனக்கு தெரியலன்னு சொல்லிட்டாரு. Related Link மனைவியை ஃபேனால் அடித்த கொடூரம் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து விசாரித்த போலீஸ்இந்த தகவல் பக்கத்துல உள்ள கிராமம் ஃபுல்லா காட்டுத்தீ போல பரவுனதால, பொதுமக்கள் எல்லாரும் ஸ்பாட்டுல கூடிருக்காங்க. அப்ப அங்கருந்த கூட்டத்த கட்டுப்படுத்துன போலீஸ், ஒரு சிலர் கிட்ட மட்டும் உயிரிழந்த இளைஞர் யாருன்னு கேட்டு விசாரணை பண்ணிருக்காங்க. ஆனா அதுலையும் எந்த ஒரு துப்பும் கிடைக்கல. இதனால அந்த பகுதியில உள்ள ஒட்டு மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து பாத்துருக்காங்க போலீஸ். அதுல சடலத்த நடுவுல வச்சு ரெண்டு இளைஞர்கள் பைக்குல வந்த காட்சிகள் பதிவாகியிருந்துருக்கு. அதவச்சு அந்த ரெண்டு இளைஞர்கள் யாரு? என்னன்னு போலீஸ் விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அதுல பைக்ல வந்த இளைஞர் ஒருத்தரு நாமக்கல் பள்ளிபாளையத்த சேந்தவருன்னு தெரியவந்துக்கு. இதனால அந்த பகுதியவே தங்களோட கன்ட்ரோல்ல கொண்டு வந்த போலீஸ், வீட்ல பதுங்கியிருந்த இளைஞர கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. அடுத்து அவரோட செல்போன பிடுங்கி செக் பண்ணிருக்காங்க. அப்ப உயிரிழந்த இளைஞர் கூட, இவரும் மற்றொரு இளைஞரும் ஒன்னா நின்னு செல்பி எடுத்த போட்டோ இருந்துருக்கு. அதவச்சு போலீசார் கொலையாளி கிட்ட கிடுக்குப்பிடி விசாரணையில இறங்குனாங்க.2 இளைஞர்களை தகாத வார்த்தையால் திட்டிய மகேந்திரன்நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்த சேந்தவரு 22 வயசான மகேந்திரன். எந்த ஒரு வேலை வெட்டிக்கும் போகாத மகேந்திரன் வேண்டாத சேர்க்கையால மதுபோதைக்கு அடிமையாகிட்டாரு. இவரும் அதே பகுதியை சேந்த 2 இளைஞர்களும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸா பழகிருக்காங்க. எங்க போனாலும் இவங்க மூணு பேரும் ஒன்னா ஊர் சுத்திகிட்டும், மது குடிச்சுக்கிட்டும் ஜாலியா இருந்துருக்காங்க. மூணு பேரும் ஒன்னா உட்காந்து மது குடிக்கும் போது அப்பப்ப இவங்களுக்குள்ள சண்டை வருவது வழக்கம். ஆனா அந்த சண்டைய இவங்களுக்குள்ளையே பேசி முடிச்சுப்பாங்களாம். கடந்த 11ம் தேதி நைட்டு பள்ளிப்பாளையம் பகுதியில உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில உட்காந்து மூணு பேரும் மது குடிச்சுருக்காங்க. மகேந்திரன தவிர்த்து மற்ற 2 இளைஞர்கள் கஞ்சாவும் இழுத்ததா கூறப்படுது. அந்த நேரத்துல மகேந்திரனுக்கும் அந்த ரெண்டு இளைஞர்களுக்கு இடையில பயங்கர சண்டை ஏற்பட்டிருக்கு. அப்ப மகேந்திரன் அந்த ரெண்டு இளைஞர்களையும் தகாத வார்த்தையால திட்டுனதாக கூறப்படுது.வீட்டில் பதுங்கியிருந்த ஒருவர் கைது, மற்றொருவனுக்கு வலைவீச்சுஇதனால கடும் கோபமான அந்த இளைஞர்கள், மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்த மகேந்திரனோட தலையிலையே வெட்டிருக்காங்க. அப்ப ரத்த வெள்ளத்துல அங்கையே சுருண்டு விழுந்த இளைஞர் துடிக்க துடிக்க உயிரிழந்துட்டாரு. ஆனா அப்பவும் ஆத்திரம் தீராத இளைஞர்கள் கஞ்சா போதையில என்ன செய்றோம்ன்னு தெரியாம அரிவாளால பல முறை மகேந்திரனோட தலையிலையே வெட்டிருக்காங்க. அடுத்து போதை கொஞ்சம் தெளிஞ்சதுக்கு அப்புறம் மகேந்திரன் சடலமா கிடந்தத பாத்து பயந்துபோன நபர்கள், சடலத்த என்ன பண்றதன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்துருக்காங்க. சடலத்த புதைச்சாலும், எரிச்சாலும் போலீஸ் கிட்ட வசமா சிக்கிருவோம்ன்னு பயந்துருக்காங்க. அதுக்கடுத்து போலீஸ் கிட்ட மாட்டாம இருக்க மாஸ்டர் ப்ளான் போட்ட இளைஞர்கள், நள்ளிரவு நேரத்துல பொதுமக்கள் நடமாட்டம் கொறஞ்ச உடனே அந்த சடலத்த பைக்ல வச்சு அங்கருந்த நாமக்கல் - ஈரோடு மாவட்ட எல்லைக்கு கொண்டு போய்ருக்காங்க. அடுத்து அந்த வழியா செல்லும் காவிரி ஆற்றுல சடலத்த தூக்கி வீசுன நபர்கள், காரியத்த கச்சிதமா முடிச்சுட்டதா நினைச்சு வீட்டுக்கு போய்ட்டாங்க. ஆனா சிசிடிவி காட்சி மூலமாகவும், செல்போன்ல மூணு பேரும் ஒன்னா நின்னு எடுத்த செல்பி போட்டா மூலமாகவும் எல்லா உண்மையயையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் பள்ளிப்பாளையத்துல உள்ள ஒரு வீட்ல பதுங்கியிருந்த இளைஞர அரெஸ்ட் பண்ணிட்டாங்க. தலைமறைவா இருக்குற மற்றொரு இளைஞர வலைவீசி தேடிட்டு இருக்காங்க. Related Link அரசு மதுபானக் கடையில் தகராறு