news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பைக்கில் வேகமாக சென்றவரை தட்டிக் கேட்ட விவசாயி
tv

Also Watch

tv

Read this

பைக்கில் வேகமாக சென்றவரை தட்டிக் கேட்ட விவசாயி

ஆரணி, திருவண்ணாமலை

Posted on: Mar 25, 2026 03:44 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM POLICE Station

வேகமாக சென்றவரை தட்டிக் கேட்ட விவசாயி :

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரையாளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரேணுகோபால்(49) கடந்த 2 தினங்களுக்கு முன்பு தன்னடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயவேல் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகின்றன.

இதனால் விவசாயி ரேணுகோபால் இருசக்கர வாகனத்தில் சென்றவரை தடுத்து நிறுத்தி தெருவில் குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பதாகவும் இருசக்கர வாகனத்தில் மிதவேகமாக செல்லுமாறு என கண்டித்துள்ளார்.

இதனால் இருதரப்பினரிடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விவசாயி ஜெயவேல் அருகிலுருந்த இரும்பு ராடை எடுத்து ரேணுகோபால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ரேணுகோபால் மயக்கமடைந்தார் பின்னர் அக்கம் பக்கத்தினர் ரேணுகோபாலை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு இன்று விடியற்காலையில் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். இச்சம்பவம் குறித்து ரேணுகோபாலின் உறவினர் லதா கொடுத்த புகாரின் பேரில்.

ஆரணி தாலுக்கா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெயவேலை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆரணி அருகே தெருவில் மிதவேமாக செல்ல அறிவுறுத்திய விவசாயி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Link
முன்னீர்பள்ளம் ஊராட்சி செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

முன்னீர்பள்ளம் ஊராட்சி செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

1
2 hrs 29 mins agoshare
VLR Land grab








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved