news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரு கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணம், நகை திருட்டு
tv

Also Watch

tv

Read this

இரு கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணம், நகை திருட்டு

அய்யம்பாளையம், திண்டுக்கல்

Posted on: Mar 25, 2026 03:59 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Undiyal theft

உண்டியல்களை உடைத்து பணம், நகை திருட்டு :

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற செல்வவிநாயகர் கோவில் மற்றும் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோவில் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில், நள்ளிரவில் இந்த கோவில்களுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கையில் கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நடமாடிய அந்த மர்ம ஆசாமிகள், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களைப் பக்குவமாக உடைத்து.

அதில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்த ரொக்கப் பணம் மற்றும் நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் கோவிலுக்குள் உலவும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து சின்ன அய்யம்பாளையம் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோவில் நிர்வாகிகள் சார்பில் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் முறையான புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்ததுடன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டி (25) என்ற வாலிபரை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர் விசாரணையில் கொள்ளையடித்துச் சென்ற பணத்தை லோன் கட்டி விட்டதாக பாண்டி கூறியுள்ளான் இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Link
நீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

நீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

1
2 hrs 29 mins agoshare
VLR Land grab








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved