news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
tv

Also Watch

tv

Read this

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

கருணீகசமுத்திரம், வேலூர்

Posted on: Mar 25, 2026 04:03 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Land grab

முள்வேலியை அகற்றி வாக்குவாதம்  :

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கருணீகசமுத்திரம் ஜெய் பீம் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த பகுதியில் இறந்தவர்களின் உடலை ரயில்வே நிலையம் அருகே அடக்கம் செய்து வந்துள்ள நிலையில் தற்போது ரயில்வே நிலையம் விரிவாக்கம் செய்ததால் இந்த பகுதியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய போதிய வழிப்பாதை இல்லை என கூறப்படுகிறது.

இதனால் இதே பகுதியில் உள்ள கானாறு ஓடை புறம்போக்கில் இறந்தவர் உடலை அடக்கம் செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து கல்கம்பம்
மூலம் கம்பிவேலி அமைத்து சுடுகாட்டிற்கு வழிவிடாமல் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் பலமுறை வருவாய் துறையிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பகுதி வாசிகள் ஒன்று திரண்டு தனிநபர் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கல் கம்பி கம்பங்களை அகற்றி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பாதைகள் எழுதி கண்டனத்தை தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் மேல்பட்டி போலீசார் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அளவிடு செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர் இதில் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related Link
இரு கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணம், நகை திருட்டு

இரு கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணம், நகை திருட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

1
2 hrs 27 mins agoshare
VLR Land grab








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved