news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவில் கும்பாபிஷேக கூட்டத்தை பயன்படுத்தி நகை திருட முயற்சி
tv

Also Watch

tv

Read this

கோவில் கும்பாபிஷேக கூட்டத்தை பயன்படுத்தி நகை திருட முயற்சி

அம்பாசமுத்திரம், நெல்லை

Posted on: Mar 25, 2026 03:49 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Jewell theft

கூட்டத்தை பயன்படுத்தி நகை திருட முயற்சி :

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பிகை உடனுறை காசிநாதர் சுவாமி திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின்பு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அம்பாசமுத்திரத்தின் அடையாளங்களில் ஒன்றாத கருதப்படும் இந்த கோயில் உள்ளூர் மக்களால் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது.

எனவே இன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கூட்டம் அதிகளவு இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டிருந்தது துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் கூட்டத்தை கண்காணித்து வந்தனர் அப்போது ஐந்து பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு சுற்றி திரிந்தது போலீசாருக்கு தெரிய வந்தது .

மேலும் அவர்கள் கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் நகை திருட முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது இதை கவனித்த காவலர்கள் அதிரடியாக அந்த பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையின் போது ஐந்து பேரில் நான்கு பேர் திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த பொன்மணி இசக்கியம்மாள் கௌதமி லட்சுமி என்பதும் மற்றொருவர் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த நாகேஸ்வரி என்பதும் தெரியவந்துள்ளது நாகேஸ்வரி மூலம் திருச்சியை சேர்ந்த 4 பேரும் இங்கு வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக திருச்சியைச் சேர்ந்த 4 பேர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது அதன் அடிப்படையில் போலீசார் அந்த நான்கு பேரையும் எளிதில் அடையாளம் கண்டு கையும் களவுமாக பிடித்ததாகவும் கூறப்படுகிறது கோவில் கும்பாபிஷேக விழாவில் திருட முயன்ற ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்பாசமுத்திர பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Link
பைக்கில் வேகமாக சென்றவரை தட்டிக் கேட்ட விவசாயி

பைக்கில் வேகமாக சென்றவரை தட்டிக் கேட்ட விவசாயி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

1
2 hrs 27 mins agoshare
VLR Land grab








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved