விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர்... நடுவீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இரும்பு வியாபாரி. சாலையில் தலைதெறிக்க அரிவாளுடன் ஓடிய மூன்று பேர். செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து மூவரையும் கஸ்டடியில் எடுத்த போலீஸ். இரும்பு வியாபாரியை கொலை செய்த நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்?விருதுநகர்ல உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனிய சேந்த ராம்குமாருக்கு 10 வருஷத்துக்கு முன்னாடி ஜெயந்தி-ங்குற பொண்ணோட கல்யாணமாகிருக்கு. இவரு இரும்பு கடை வச்சுருக்காரு. இந்த தம்பதிக்கு ஆகாஷ், ஹரிஷ், ஹரிணின்னு மூணு பசங்க இருக்காங்க. கல்யாணமான கொஞ்சம் நாட்கள் மட்டும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த இந்த ஜோடிக்குள்ள அடிக்கடி பிரச்னையாகி, கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கு. இதனால கணவன், மனைவி பிரிஞ்சு வாழ ஆரம்பிச்சுட்டாங்க. மனைவி தன்னோட மகள் ஹரிணிய கூப்டுட்டு தம்பி செந்தில்குமார் வீட்ல தங்கி இருந்துருக்காங்க. ஆகாஷூம், ஹரிஷூம் ராம்குமார் கூட இருந்துருக்காங்க. இப்படியே இவங்க வாழ்க்க போய்ட்டு இருந்த நேரத்துல, ஜெயந்தி தன்னோட மகள் ஹரினி கூட அங்குள்ள ஒரு பஸ் ஸ்டான்ட்ல நின்னுட்டு இருந்துருக்காங்க. அப்ப அங்க மதுபோதையில வந்த செந்தில்குமார், ராம்குமார தகாத வார்த்தையால திட்டிருக்காரு...உங்க அம்மா எங்க வீட்ல தான் தங்கி இருக்கா, உங்க அப்பனுக்கு, பொண்டாட்டி கூட வாழ துப்பில்லை, ஊதாரியா இருக்கான்னு, மகள் முன்னாடியே ராம்குமார தகாத வார்த்தையால திட்டிருக்காரு. இதகேட்ட ஹரிணி, நடந்த எல்லாத்தையும் தன்னோட தந்தைக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டதா கூறப்படுது.இதனால கடும் கோபமான ராம்குமார், செந்தில்குமாருக்கு ஃபோன் பண்ணி குழந்தை முன்னாடி கெட்ட வார்த்தை போட்டு பேசிருக்க, உனக்கு அறிவு இல்லையான்னு சொல்லி, தகாத வார்த்தையால திட்டிருக்காரு. அதுக்கு செந்தில்குமார் நான் அப்படி தான் திட்டுவேன்னு பதில் சொல்லிருக்காரு. இதனால ரெண்டு பேருக்கு இடையில வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. செந்தில்குமாரையும், அவரோட குடும்பத்தினரையும் ராம்குமார் தகாத வார்த்தையால திட்டுனதா கூறப்படுது.இதகேட்டு கோபத்தோட உச்சத்துக்கே போன செந்தில் குமார், தாய் கோவிந்தம்மாள், சகோதரி இந்திராணி கிட்ட எல்லாத்தையும் சொல்லிருக்காரு. அதுக்கடுத்து அந்த மூணு பேரும் நேரா ராம்குமாரோட வீட்டுக்கு போய்ட்டு சண்டை போட்ருக்காங்க. அடுத்து மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்த செந்தில்குமார், ராம்குமார சரமாரியா வெட்டிக்கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டாரு. இந்த விஷயத்த கேட்ட போலீஸ் தீர விசாரணை பண்ணி செந்தில்குமார், கோவிந்தம்மாள், இந்திராணிய அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.